பாடல் பதிவேற்றம் :
பாடல் விருப்பம் :
பெண் : நீ பாடும் ராகம் வந்து
நிம்மதிய தந்ததய்யா
நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல
ஆண் : பூவான பாட்டு
இந்த பொண்ண தொட்டு
போனதையா போன வழி
பார்த்த கண்ணு மூடல
பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி தான்
என்னோட ஆசை எல்லாம்
ஏத்துக்கணும் நீங்க தான்
பெண் : உங்கள தான் எண்ணி எண்ணி
என் உசுரு வாழும்
சொல்லுமைய்யா நல்ல சொல்லு
சொன்னா போதும்
ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது
ஆண் : நான் உன்னை மட்டும்
பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி
வாழும் மயிலு தான்
ஆண் : மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையொடுனக்கு இடமும் இருக்கு
ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான் தவிக்குது