menu-iconlogo
huatong
huatong
p-b-sreenivas-nilave-ennidam-nerungathe-cover-image

Nilave Ennidam Nerungathe

P. B. Sreenivashuatong
playboi.comhuatong
Paroles
Enregistrements
நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நானில்லை,

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ,

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ,

பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்

என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ....

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....

ஊமையின் கனவை யார் அறிவார்

ஊமையின் கனவை யார் அறிவார்,

என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்

மூடிய மேகம் கலையுமுன்னே

நீ பாட வந்தாயோ வெண்ணிலவே....

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....

அமைதி இல்லாத நேரத்திலே

அமைதி இல்லாத நேரத்திலே,

அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்

நிம்மதி இழந்து நான் அலைந்தேன்,

இந்த நிலையில் உன்னை

ஏன் தூது விட்டான்.....

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நானில்லை,

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....

Davantage de P. B. Sreenivas

Voir toutlogo