menu-iconlogo
logo

Onna Renda Thamaraipoo

logo
Paroles
திரைப்படம்: தழுவாத கைகள்

இசையமைப்பாளர் : இளையராஜா

பதிவேற்றம்: அருண்..

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல

இதன் காரணம் உன் மனம் தாராளம்

ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு

அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு

எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

பதிவேற்றம்: அருண்..

பெண் : ஏழெட்டுப் பிள்ளைக்கு தகப்பனையா

இன்னமும் அலுக்கலியா

ஆண் : வாழுற வரையிலே மனுசனுக்கு

நித்தமும் பசிக்கலையா

பெண் : இது தான் நமக்கு

முதல் நாள் இரவா

ஆண் : முதல் நாள் இரவை

நெனச்சா தவறா

பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே

ஆண் : நடக்கட்டும் சாஞ்சுக்க மடி மேலே

பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே

ஆண் : அடி மானே தேனே வா

பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல

இதன் காரணம் உன் மனம் தாராளம்

ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு

அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பதிவேற்றம்: அருண்..

ஆண் : காலடித் தாமரை நோகுமம்மா

நாலடி நீ நடந்தால்

பெண் : வாலிப நாடகம் போதுமையா

நூலிடை தாங்கிடுமா

ஆண் : மெதுவா தொடுவேன்

வலிச்சா விடுவேன்

பெண் : இடம் நான் கொடுத்தால்

மடிதான் கனக்கும்

ஆண் : ஆத்திரம் அவசரம் புரியாதா

இந்த ஆம்பள சங்கதி தெரியாதா

பெண் : ஆம்பள சங்கதி தெரியாதா

புது ரோசப் பூப் போல் நான்

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல

இதன் காரணம் உன் மனம் தாராளம்

ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு

அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு

எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

பெண் : இதன் காரணம் உன் மனம் தாராளம்

பதிவேற்றம்: அருண்..நன்றி..

Onna Renda Thamaraipoo par P. Jayachandran/S. Janaki - Paroles et Couvertures