ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம்
மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
தெய்வமகள் என்று தேவன் படைத்தானோ
தங்கச்சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ
மஞ்சள் நிலவே
ராஜா மகள்...ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்த கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் ..சோலைகுயிலா
ராஜா மகள்...ரோஜா மகள்