menu-iconlogo
logo

Aayiram Nilave Vaa

logo
Paroles
ஆயிரம் நிலவே வா

ஓராயிரம் நிலவே வா

இதழோரம்

சுவை தேட

புதுப் பாடல்

விழி பாடப் பாட

ஆயிரம் நிலவே வா

ஓர் ஆயிரம் நிலவே வா

இதழோரம்

சுவை தேட

புதுப் பாடல்

விழி பாடப் பாட

ஆயிரம் நிலவே வா

ஓர் ஆயிரம் நிலவே வா

நல்லிரவு துணையிருக்க

நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன

நடைதளர்ந்து போனதென்ன

நல்லிரவு துணையிருக்க

நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன

நடைதளர்ந்து போனதென்ன

இல்லை உறக்கம்

ஒரே மனம்

என்னாசை பாராயோ

இல்லை உறக்கம்

ஒரே மனம்

என்னாசை பாராயோ

என் உயிரிலே

உன்னை எழுத

பொன்மேனி தாராயோ

ஆயிரம் நிலவே வா

ஓராயிரம் நிலவே வா

மன்னவனின் தோளிரண்டை

மங்கை எந்தன் கை தழுவ

கார் குழலும் பாய் விரிக்கும்

கண் சிவந்து வாய் வெளுக்கும்

மன்னவனின் தோளிரண்டை

மங்கை எந்தன் கை தழுவ

கார் குழலும் பாய் விரிக்கும்

கண் சிவந்து வாய் வெளுக்கும்

இந்த மயக்கம்

எழில் முகம்

முத்தாக வேர்க்காதோ

இந்த மயக்கம்

எழில் முகம்

முத்தாக வேர்க்காதோ

அந்த நினைவில்

வந்து விழுந்தேன்

கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா

ஓராயிரம் நிலவே வா

பொய்கை எனும் நீர்மகளும்

பூவாடை போர்த்திருந்தாள்

தென்றல் எனும் காதலனின்

கை விலக்க வேர்த்து நின்றாள்

ஆ..

பொய்கை எனும் நீர்மகளும்

பூவாடை போர்த்திருந்தாள்

ஆ..

தென்றல் எனும் காதலனின்

கை விலக்க வேர்த்து நின்றாள்

என்ன துடிப்போ

அவள் நிலை

நீ உணர மாட்டாயோ

என்ன துடிப்போ

அவள் நிலை

நீ உணர மாட்டாயோ

அந்த நிலையில்

தந்த சுகத்தை

நான் உணரக் காட்டாயோ

ஆயிரம் நிலவே வா

ஓராயிரம் நிலவே வா

Aayiram Nilave Vaa par P. Susheela/Spb - Paroles et Couvertures