menu-iconlogo
huatong
huatong
avatar

Selaila Veedu Kattava

P. Unnikrishnan/K. S. Chithrahuatong
mohawk33417huatong
Paroles
Enregistrements
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க

ஜன்னல் வெச்ச ஜாக்கெட்

போடவா தென்றல் அடிக்க

மூக்குத்தியின் மின்னல் ஒரு

தீபம் ஏற்றிவைத்துப் போக

சொக்குகின்ற வெட்கம் வந்து

வண்ணக் கோலமொன்று போட

என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க

ஜன்னல் வெச்ச ஜாக்கெட்

போடவா தென்றல் அடிக்க

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே

அசைந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே

அசைந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே

ஓவியத்தைத் திரை மறைவில்

ஒலித்துவைப்பதேனம்மா

காற்று மழைச் சாரலிலே

நனையவிட்டால் நியாயமா

ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை மூடாதே

விழியை மூடும்போதிலும்

விரல்களாலே திருடாதே

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க

ஜன்னல் வெச்ச ஜாக்கெட்

போடவா தென்றல் அடிக்க

ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்

அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்

மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்

அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்

முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே

செவ்விதழின் ஈரங்களே

தீர்த்தமென்று தோணுதே

காலநேரமேன்பது காதலில் இல்லையா

காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க

ஆ... ஜன்னல் வெச்ச ஜாக்கெட்

போடவா தென்றல் அடிக்க

மூக்குத்தியின் மின்னல் ஒரு

தீபம் ஏற்றிவைத்துப் போக

ஆ... சொக்குகின்ற வெட்கம் வந்து

வண்ணக் கோலமொன்று போட

என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க

ஜன்னல் வெச்ச ஜாக்கெட்

போடவா தென்றல் அடிக்க.....

Davantage de P. Unnikrishnan/K. S. Chithra

Voir toutlogo