நல்வரவு
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார்
பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
சிறு துளிக்கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல்
மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே
உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல்
எங்குள்ளதென்பதும்
நினைத்தால்
நினைத்தால்
அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக்
கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்..
ஓ.. ஓ..
பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்..
ஓ.. ஓ..
பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று
மெல்லிசை யாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும்
நீயெந்தன் அதிசயம்
தாரார ராரார
தாரார ராரார
தாரார ராரார ரா...
ஓ.. ஓ..
தாரார ராரார
தாரார ராரார
தாரார ராரார ரா...
ஓ.. ஓ..