menu-iconlogo
huatong
huatong
avatar

athikai kai kai

Pb Sreenivas/P Susheelahuatong
rbjonehuatong
Paroles
Enregistrements
அத்திக்காய்

காய் காய்

ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய்

காயாதே

என்னைப்போல்

பெண்ணல்லவோ

நீ என்னைப்போல்

பெண்ணல்லவோ

அத்திக்காய்

காய் காய்

ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய்

காயாதே

என்னுயிரும்

நீயல்லவோ

என்னுயிரும்

நீயல்லவோ

அத்திக்காய்

காய் காய்

ஆலங்காய்

வெண்ணிலவே

ஓ...

ஓ...

கன்னிக்காய்

ஆசைக்காய்

காதல்கொண்ட

பாவைக்காய்

அங்கே காய்

அவரைக்காய்

மங்கை எந்தன்

கோவைக்காய்

கன்னிக்காய்

ஆசைக்காய்

காதல் கொண்ட

பாவைக்காய்

அங்கே காய்

அவரைக்காய்

மங்கை எந்தன்

கோவைக்காய்

மாதுளங்காய்

ஆனாலும்

என்னுளங்காய்

ஆகுமோ

என்னை நீ

காயாதே

என்னுயிரும்

நீயல்லவோ

இத்திக்காய்

காயாதே

என்னைப்போல்

பெண்ணல்லவோ

ஓ...

ஆ...

இரவுக்காய்

உறவுக்காய்

ஏங்கும் இந்த

ஏழைக்காய்

நீயும் காய்

நிதமும் காய்

நேரில் நிற்கும்

இவளைக்காய்

இரவுக்காய்

உறவுக்காய்

ஏங்கும் இந்த

ஏழைக்காய்

நீயும் காய்

நிதமும் காய்

நேரில் நிற்கும்

இவளைக் காய்

உருவங்காய்

ஆனாலும்

பருவங்காய்

ஆகுமோ

என்னை நீ

காயாதே

என்னுயிரும்

நீயல்லவோ

அத்திக்காய்

காய் காய்

ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய்

காயாதே

என்னுயிரும்

நீயல்லவோ

ஆஹாஹா...

ஏலக்காய்

வாசனைபோல்

எங்கள் உள்ளம்

வாழைக்காய்

சாதிக்காய்

பெட்டகம் போல்

தனிமை இன்பம்

கனியக்காய்

ஏலக்காய்

வாசனைபோல்

எங்கள் உள்ளம்

வாழைக்காய்

சாதிக்காய்

பெட்டகம் போல்

தனிமை இன்பம்

கனியக்காய்

சொன்னதெல்லாம்

விளங்காயோ

தூது வழங்காய்

வெண்ணிலா

என்னை நீ

காயாதே

என்னுயிரும்

நீயல்லவோ

அத்திக்காய்

காய் காய்

ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய்

காயாதே

என்னுயிரும்

நீயல்லவோ

ஆஹாஹா...

உள்ளமெல்லாம்

மிளகாயோ

ஒவ்வொரு பேர்

சுரைக்காயோ

வெள்ளரிக்காய்

பிளந்ததுபோல்

வெண்ணிலவே

சிரித்தாயோ

உள்ளமெல்லாம்

மிளகாயோ

ஒவ்வொரு பேர்

சுரைக்காயோ

வெள்ளரிக்காய்

பிளந்ததுபோல்

வெண்ணிலவே

சிரித்தாயோ

கோதை எனை

காயாதே

கொற்றவரை காய்

வெண்ணிலா

இருவரையும்

காயாதே

தனிமையில் ஏங்காய்

வெண்ணிலா

அத்திக்காய்

காய் காய்

ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய்

காயாதே

என்னுயிரும்

நீயல்லவோ

ஆஹா... ஹா ஹா...

ஓஹோ... ஹோ ஹோ...

ம்...

Davantage de Pb Sreenivas/P Susheela

Voir toutlogo