menu-iconlogo
logo

Indha Mandrathil Odi

logo
Paroles
திரைப்படம் : போலீஸ்காரன் மகள்

இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

வரிகள் : கவிஅரசு கண்ணதாசன்

பெண்: இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்..

இந்த மன்றத்தில் ஓ..டிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்..

நீ சென்றிடும் வழியினிலே..

என் தெய்வத்தை காண்பாயோ.....

இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்..

பெண்: வண்ண மலர்களின் அரும்பாவாள்

உன் மனதுக்குள் கரும்பாவாள்

வண்ண மலர்களின் அரும்பாவாள்

உன் மனதுக்குள் கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள்

என்று ஒரு முறை கூறாயோ.....

இந்த மன்றத்தில் ஓ..டிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்...

பெண்: நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்..

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்..

அவள் விடிந்தபின் துயில்கின்றாள்

என்னும் வேதனை கூறாயோ.....

ஆண்: இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்..

என் கண்ணுக்கு கண்ணாகும்..

இவள் சொன்னது சரிதானா.....

இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்..

ஆண்: தன் கண்ணனை தே..டுகிறாள்

மன காதலை கூறுகிறாள்..

தன் கண்ணனை தே..டுகிறாள்

மன காதலை கூறுகிறாள்..

இந்த அண்ணனை மறந்துவிட்டாள்..

என் அதனையும் கூறாயோ.....

ஆண்: இந்த மன்றத்தில் ஓ..டிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்..

என் கண்ணுக்கு கண்ணாகும்

இவள் சொன்னது சரிதானா.....

இந்த மன்றத்தில் ஓ..டிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்..

Indha Mandrathil Odi par PB Srinivas/S Janaki - Paroles et Couvertures