மௌனமே பார்வையால் ஒரு
பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு
பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
அல்லிக்கொடியே உன்தன்
முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வர
வேண்டும் வர வேண்டும்
அல்லிக்கொடியே உன்தன்
முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்னத்
தங்க நகை போல் என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு
விட வேண்டும் என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு
பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி
வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த
சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு
பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்