menu-iconlogo
logo

Thulli Thirintha Pen துள்ளி திரிந்த பெண்

logo
Paroles

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

MUSIC

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளி ஒன்று

பேச மறந்தேன் இன்று

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

MUSIC

வெள்ளி வடிவ முகம் ஒன்று

வெட்கம் கொண்டதேன் இன்று

வெள்ளி வடிவ முகம் ஒன்று

வெட்கம் கொண்டதேன் இன்று

வேலில் வடித்த விழி ஒன்று

மூடிக்கொண்டதேன் இன்று

வேலில் வடித்த விழி ஒன்று

மூடிக்கொண்டதேன் இன்று

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

MUSIC

அல்லி பூத்த முகத்தினிலே

முல்லை பூத்த நகை எங்கே

அல்லி பூத்த முகத்தினிலே

முல்லை பூத்த நகை எங்கே

சொல்லி வைத்து வந்தது போல்

சொக்க வைக்கும் மொழி எங்கே

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

MUSIC

ஆசை நெஞ்சில் இருந்தாலும்

அமைதி கொள்ளும் குணம் ஏனோ

ஆசை நெஞ்சில் இருந்தாலும்

அமைதி கொள்ளும் குணம் ஏனோ

அன்னை தந்த சீதனமோ

எனை வெல்லும் நாடகமோ

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளி ஒன்று

பேச மறந்ததேன் இன்று

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று