பெண் : மன்மத பாணம்
இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம்
இப்போது நீங்கும் காலமே
ஆண் : விண்ணுக்கு மேலே
இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே
கண்டேனே இன்ப வேளையே
பெண் : மது மொழிக் கேட்டு
மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி
அணைக்குது மஞ்சம்
ஆண் : சின்னக் கிளி
என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவ
பெண் : பட்டுப் பூவே
மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி
கவி பாட வா
பட்டுப் பூவே
மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
ஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே
உன்னைத்தானே
சொந்தம் நானே
சொந்தம் நானே
பெண் : பட்டுப் பூவே
மெட்டுப் பாடு
ஆண் : கட்டி கலந்தாடி
கவி பாட வா
ஆண் மற்றும் பெண் : பட்டுப் பூவே…