menu-iconlogo
logo

Poongatru Un Per Solla

logo
Paroles
ஆ: பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

பெ: நீரூற்று என் தோள் கொஞ்ச

பார்த்தேனே இன்று

ஆ:தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளத்திலே

கல்யாண வைபோகம்தான்

பெ:நீரூற்று என் தோள் கொஞ்ச

பார்த்தேனே இன்று

ஆ:மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு

மோக பண்ண பாடுதே.....

மேலை காற்றோடு கைசேர்த்து நாணல்

காதல் கொண்டாடுதே.....

பெ:ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்

காலம் இதுவல்லவா.....

ஈர சிறகோடு இசை பாடி திரியும்

நேரம் இதுவல்லவா

ஆ: ஏதேதோ

எண்ணம் தோன்ற

ஏகாந்தம் இங்கே

பெ:நான் காணும்

வண்ணம் யாவும்

நீதானே அன்பே

ஆ:வண்ணம் மாறாமல்

மீண்டும் மீண்டும்

பெ: ஆசைகள் ஈடேற கூடும்

ஆ: பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

பெ:ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன

ஜீவன் உன்னோடுதான்....

தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட

தேவன் என்னோடுதான்....

ஆ:நீல வான் கூட நிறம் மாறி போகும்

நேசம் நிறம் மாறுமா....

கால காலங்கள் போனாலும் என்ன

காதல் தடம் மாறுமா

பெ:ஓயாமல்

உன்னை கொஞ்சும்

ஊதாபூ வண்ணம்

ஆ: ராஜாவின்...ஹஹ்

முத்தம் கொள்ளும்

ரோஜாபூ கன்னம்

பெ:வாடை தீண்டாத

வாழைத்தோட்டம்

ஆ:ஆனந்த எல்லைகள் காட்டும்

பெ:பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

ஆ:நீரூற்று என் தோள் கொஞ்ச

பார்த்தேனே இன்று

பெ:தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளத்திலே

ஆ:கல்யாண வைபோகம்தான்…

பூங்காற்று உன் பேர் சொல்ல

கேட்டேனே இன்று

Poongatru Un Per Solla par S. P. Balasubrahmanyam/KS Chithra - Paroles et Couvertures