ஆ: கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
பெ: ஆஹ்
ஆ: உன் கண்கள் இரு ஊதாப்பூ
பெ: ஹாஹ்
ஆ: இது பூவில் பூத்த பூவையோ
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
ஆ: அந்தப்புரம் எந்தப்புரமோ
விழிமையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ
இருகைதொட்டு
அந்தப்புரம் எந்தப்புரமோ
விழிமையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ
இருகைதொட்டு
பெ: ஆயிரம் பொன்
பூக்கும் எந்தன்
தேகம் எங்குமே
ஆ: லல லல லலலா
பெ: அங்குலம் விடாமல் இன்பகங்கை பொங்குமே
ஆ: லல லல லலலா
தோளிலும்.. என் மார்பிலும்..
கொஞ்சிடும்.. என் அஞ்சுகம்..
நான் நீ... ஏது? ஹோய் ஹோய்
பெ: கண்மணியே பேசு
ஆ:.ம்ம்
பெ: மௌனம் என்ன கூறு
கன்னங்கள்
புது ரோசாப்பூ
ஆ: ஆஹ்..
பெ: என் கண்கள்...
இரு ஊதாப்பூ
ஆ: ம்ம்..
பெ : இது....
பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
பெ: உன்னைக் கொடு
என்னைத்தருவேன்
ஒரு தாலாட்டில்
பிள்ளைத்தமிழ்
சொல்லித் தருவேன்
விழி மூடாமல்
உன்னைக் கொடு
என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில்
பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன்
விழி மூடாமல்
ஆ: கண்களால்...
என் தேகம் எங்கும்
காயம் செய்கிறாய்
பெ: லல லல லலலா
ஆ: கைகளால்...
என் பாதம் நீவி
ஆறச் செய்கிறாய்
பெ: லல லல லலலா
வானகம் இவ்வையகம்
யாவுமே...என் கையகம்
நீதான் தந்தா..ய் ஹோ ஹோ
ஆ: கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
பெ: கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
ஆ: கன்னங்கள் புது ரோசாப்பூ
பெ: ஆஹ்..
ஆ: உன் கண்கள்...
இரு ஊதாப்பூ
பெ: இது....
பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு