சின்ன சின்ன கனவுகள் 
சின்ன சின்ன குறும்புகள் 
எல்லாம் சேர்த்து செய்த வீடு இது 
சின்ன சின்ன சிரிப்புகள் 
சின்ன சின்ன சண்டைகள் 
சங்கீதமாய் மாறும் இடம் இது 
இந்த கூட்டுக் குடும்பத்தில் 
வாழ சொர்க்கம் ஏங்குமே 
இது வீட்டுக்குள்ளே வேடந்தாங்கல் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம் 
சின்ன சின்ன கனவுகள் 
சின்ன சின்ன குறும்புகள் 
எல்லாம் சேர்த்து செய்த வீடு இது 
சின்ன சின்ன சிரிப்புகள் 
சின்ன சின்ன சண்டைகள் 
சங்கீதமாய் மாறும் இடம் இது 
 அணில் வந்து விளையாடும் தாழ்வாரம் 
அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம் 
அணில் வந்து விளையாடும் தாழ்வாரம் 
அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம் 
ஆகாய வெண்ணிலவில் வெளிச்சம் கொஞ்சம் வாங்கி 
அணையாத விளக்கெரியும் எங்கள் வீட்டு மாடம் 
இது போதும் இதுபோதும் 
வேறு என்ன வேண்டும் 
இங்கு வாழும் நாளெல்லாம் 
திருநாளாய் மாறும் 
சின்ன சின்ன கனவுகள் 
சின்ன சின்ன குறும்புகள் 
எல்லாம் சேர்த்து செய்த வீடு இது 
சின்ன சின்ன சிரிப்புகள் 
சின்ன சின்ன சண்டைகள் 
சங்கீதமாய் மாறும் இடம் இது 
 புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம் 
பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும் 
புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம் 
பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும் 
இறைவனுக்கு முகவரிகள் எங்கு என்று கேட்டால் 
இங்கிருக்கும் உறவுகளை வந்து பார்க்க சொல்வோம் 
பொன் வேண்டாம் பொருள் வேண்டாம் 
பந்தபாசம் போதும் 
பூமியிலே நாங்கள் வாழும் 
வாழ்க்கை அர்த்தமாகும் 
சின்ன சின்ன கனவுகள் 
சின்ன சின்ன குறும்புகள் 
எல்லாம் சேர்த்து செய்த வீடு இது 
சின்ன சின்ன சிரிப்புகள் 
சின்ன சின்ன சண்டைகள் 
சங்கீதமாய் மாறும் இடம் இது 
இந்த கூட்டுக் குடும்பத்தில் 
வாழ சொர்க்கம் ஏங்குமே 
இது வீட்டுக்குள்ளே வேடந்தாங்கல் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம் 
இதுதான் சந்தோசம் இதுதான் உற்சாகம்