menu-iconlogo
huatong
huatong
Paroles
Enregistrements
குருவாயூரப்பா குருவாயூரப்பா

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

குருவாயூரப்பா குருவாயூரப்பா

வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்

நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

தினந்தோறும் இரவில் நடு ஜாமம் வரையில்

நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்

அலைபாயும் என் ஜீவன்தான்

வா வா என் தேவா செம்பூவா என் தேகம்

சேராதோ உன் கைகளிலே

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்

என் மேல் ஒரு போர் தொடுக்க

எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு

மானே வா உனை யார் தடுக்க

பரிமாறலாம் பசியாறலாம்

பூமாலை நீ சூடும் நாள்

மாது உன் மீது இப்போது என் மோகம்

பாயாதோ சொல் பூங்குயிலே

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

குருவாயூரப்பா குருவாயூரப்பா

வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன

நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

குருவாயூரப்பா குருவாயூரப்பா

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

Davantage de S.P. Balasubrahmanyam/k.s.chitra

Voir toutlogo
Guruvayurappa par S.P. Balasubrahmanyam/k.s.chitra - Paroles et Couvertures