menu-iconlogo
logo

Adi Vaanmathi

logo
Paroles
அடி வான்மதி என் பார்வதி

காதலி கண் பாரடி

அடி வான்மதி என் பார்வதி

காதலி கண் பாரடி

தேடி வந்த தேவதாசை காண ஓடிவா

அடி பார்வதி என் பார்வதி

பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா

பாடும் பாடல் அங்கே கேட்காதா

அடி வான்மதி என் பார்வதி

சின்ன ரோஜா இதழ்

அது கன்னம் நான் என்றது

பாடும் புல்லாங்குழல்

உன் பாஷை நான் என்று கூறும்

கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்

தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்

தேன் தர வேண்டும்

நீ வர வேண்டும்

கண்வாசல் பார்த்தாடு வா ஆஆ…

ஒரு வான்மதி உன் பார்வதி

காதலி என்னை காதலி

தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன்

என் தேவதாஸ் என் தேவதாஸ்

பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே

பாரு நானும் உன்னை பார்த்தேனே

ஒரு வான்மதி உன் பார்வதி

கோடை காலங்களில்

குளிர்காற்று நீயாகிறாய்

வாடை நேரங்களில் ஒரு

போர்வை நீயாக வந்தாய்

கண்கள் நாலும் பேசும் நேரம்

நானும் நீயும் ஊமை ஆனோம்

மை விழி ஆசை கைவளையோசை

என்னென்று நான் சொல்லவா

அடி வான்மதி என் பார்வதி

காதலி கண் பாரடி

தேடி வந்த தேவதாசை காண ஓடிவா

என் தேவதாஸ் என் தேவதாஸ்

பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே

பாரு நானும் உன்னை பார்த்தேனே

அடி வான்மதி என் பார்வதி

தேவதாஸ் என் தேவதாஸ்