யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப் போல நட்பை எண்ணுவோம்
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
Warship என்றும் நீரில் ஓடும்
Spaceship என்றும் வானில் ஓடும்
Friendship ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோஹோஹோ...
Friendship என்றும் தெய்வம் என்று
Worship செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே
ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது
நண்பா வா... ஹே ஹே
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
எங்கும் திரியும் இளமைத்தீயை
என்றும் எரியும் இனிமைத்தீயை
தண்ணீர் அவிக்குமா வீசும் காற்றும் அணைக்குமா
என்னைக் கண்டா தன்னந்தனியா
எட்டிப் போகும் சிக்குன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்
நாட்டிலுள்ள கூட்டணி போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே
நண்பா வா... ஹே ஹே
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது