பெ: முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
ஆ: முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
இன்னும் பல பிறவிகள்
நம்முடைய உறவுகள்
வாழும் தொடர்கதைதான்
உந்தன் நேசம் வளர்பிறைதான்
பெ:முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
பெ: உன்னப் பார்த்து ஆசப்பட்டேன்
அத பாட்டில் சொல்லிப்புட்டேன்
நீயும் தொட நானும் தொட
நாலு வகைக் கூச்சம் விட
அட்டை போல ஒட்டியிருப்பேன்
ஆ: இந்தக் காதல் பொல்லாதது
ஒரு காவல் இல்லாதது
ஊதக் காத்தில் வஞ்சி மாது
ஒத்தயிலே வாடும்போது
போர்வை போலப் பொத்தி அணைப்பேன்
பெ: ஆறேழு நாளாச்சு விழி மூடி
அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி
ஆ: நீதானே மானே என் இளஞ்சோடி
உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி
பெ: நித்தம் தவித்தேன் நீ வரும் வரைக்கும்
ஆ: முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
பெ: முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே...
ஆ: புள்ளி மானு பெண்ணானதா
கெண்டை மீனு கண்ணானதா
பூ முடிச்சுப் பொட்டு வச்சு
புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
பெ: அட வாய்யா கையத் தொடு
பள்ளிப் பாடம் கத்துக் கொடு
ஆவணியில் பூப்படைஞ்சே
தாவணியைப் போட்டுக்கிட்ட
சின்னப் பொண்ண ஆசை விடுதா
ஆ: ஆவாரம் பூ வாட விடுவேனா
ஒரு அச்சாரம் வெக்காம இருப்பேனா
பெ: தேனாறும் பாலாறும் கலந்தாச்சு
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு
ஆ: என்னைப் படைச்சான்
நீ துணை வரத்தான்
பெ: முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
பெ: முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
மீண்டும் சந்திப்போம் 01 05 2020