நல்வரவு
மின்சார பூவே
பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே
பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில்
நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்
சகியே
சகியே
சகியே..
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும்
நீ வேண்டும்
மின்சாரா கண்ணா
மின்சாரா கண்ணா
என் மன்னா
என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை
நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே
நீ குளிர் காய வேண்டும்
மதனா
மதனா
மதனா...
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும்
நீ வேண்டும்
மின்சாரா கண்ணா...