மனசுல என்ன ஆகாயம்
தெனம் தெனம் அது புதிர் போடும்
ரகசியத்த யாரு அறிஞ்சா?
அதிசயத்த யாரு புரிஞ்சா?
வெத வெதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தெனம் தோறும்
மலர் தொடுக்க நார எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம்
விழுதிலே ஊஞ்ஜல் ஆடும் கிளியெல்லாம்
மூடும்
சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
கேட்டிடாமலே
தாயின் மடிய தேடி ஓடும்
மலநதி போல...
கரும் பாற மனசுல
மயில் தோக விரிக்குதே
மழ சாரல் தெளிக்குதே
புல் வெளி பாத விரிக்குதே
வானவில் கொடையும் புடிக்குதே
புல் வெளி பாத விரிக்குதே
வானவில் கொடையும் புடிக்குதே
மணியின் ஓச கேட்டு
மன கதவு தெறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காத்தில் மெதக்குதே
எளங்காத்து வீசுதே
எச போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே