கண் போனபோக்கிலே
கால் போகலாமா..
கால் போன போக்கிலே
மனம் போகலாமா..
கண் போனபோக்கிலே
கால் போகலாமா..
கால் போன போக்கிலே
மனம் போகலாமா..
மனம் போனபோக்கிலே
மனிதன்போகலாமா..
மனம் போனபோக்கிலே
மனிதன்போகலாமா..
மனிதன் போன பாதையை
மறந்துபோகலாமா..
மனிதன் போன பாதையை
மறந்துபோகலாமா..
கண் போனபோக்கிலே
கால் போகலாமா..
கால் போன போக்கிலே
மனம் போகலாமா..
நீ பார்த்தபார்வைகள்
கனவோடுபோகும்..
நீ சொன்ன வார்த்தைகள்
காற்றோடு போகும்..
நீ பார்த்தபார்வைகள்
கனவோடுபோகும்..
நீ சொன்ன வார்த்தைகள்
காற்றோடு போகும்..
ஊர் பார்த்தஉண்மைகள்
உனக்காக வாழும்..
உணராமல் போவோர்க்கு
உதவாமல் போகும்.
உணராமல் போவோர்க்கு
உதவாமல் போகும்.
கண் போன போக்கிலே
கால் போகலாமா..
கால் போன போக்கிலே
மனம் போகலாமா....
பதிவேற்றம்
பொய்யான சில பேர்க்கு
புது நாகரீகம்..
புரியாத பலபேர்க்கு
இது நாகரீகம்..
முறையாக வாழ்வோர்க்கு
எது நாகரீகம்.. முன்னோர்கள் சொன்னார்கள்
அது நாகரீகம்..
முன்னோர்கள் சொன்னார்கள்
அது நாகரீகம்..
கண் போன போக்கிலே
கால் போகலாமா...
கால் போன போக்கிலே
மனம் போகலாமா..
திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள்
பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர்சொல்ல வேண்டும்
இவர் போல.. யார் என்று..
ஊர்சொல்ல வேண்டும்
கண் போன போக்கிலே
கால் போகலாமா..
கால் போன போக்கிலே
மனம் போகலாமா...
நன்றி