
Nee Pathi Naan Pathi (Short Ver.)
பெண் :வானப்பறவை
வாழ நினைத்தால்
வாசல் திறக்கும்
வேடந்தாங்கல்
ஆண் :கானப்பறவை
பாட நினைத்தால்
கையில் விழுந்த
பருவப்பாடல்
பெண் :மஞ்சள் மணக்கும்
என் நெற்றி
வைத்த
பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும்
உன்னாலே
ஆண் :மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை
ரத்தினத்தை
அள்ளித்தெளிக்கும்
முன்னாலே
பெண் :மெய்யானது
உயிர் மெய்யாகவே
தடையேது
ஆண் :நீ பாதி
நான் பாதி
கண்ணே
பெண் :அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
நீ பாதி
நான் பாதி
கண்ணா
ஆண் :அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
ஆண் :இடது விழியில்
தூசி விழுந்தால்
வலது விழியும்
கலங்கி விடுமே
பெண் :இருட்டில் கூட
இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்
ஆண் :சொர்கம் எதற்கு
என் பொன்னுலகம்
பெண்ணுருவில்
பக்கம் இருக்கு
கண்ணே வா
பெண் :இந்த மனம்தான்
என் மன்னவனும்
வந்துலவும்
நந்தவனம் தான்
அன்பே வா
ஆண் :சுமையானது
ஒரு சுகமா..னது
சுவை நீ தான்
பெண் :நீ பாதி
நான் பாதி
கண்ணா
ஆண் :அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
நீயில்லையே
இனி நானில்லையே
உயிர் நீயே..
பெண் :நீ பாதி
நான் பாதி
கண்ணா
ஆண் :அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
Nee Pathi Naan Pathi (Short Ver.) par Uma Ramanan/K. J. Yesudas - Paroles et Couvertures