menu-iconlogo
logo

Penne Neeyum penna

logo
Paroles
வணக்கம் உறவுகளே

உங்கள் ஆதரவுக்கு நன்றி

ஆ: பெண்ணே நீயும் பெண்ணா..

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா..

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பனி பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி

பிரம்மன் செய்த சாதனை..

உன்னில் தெரிகிறது..

உன்னை எழுதும் போது தான்

மொழிகள் இனிக்கிறது..

பெண்ணே நீயும் பெண்ணா..

பெண்ணாகிய ஓவியம்..

ரெண்டே ரெண்டு கண்ணா..

ஒவ்வொன்றும் காவியம்..

உங்கள் ஆதரவுக்கு நன்றி

அழகிய தமிழ் வரிகளையும்

பாடல்களையும் உங்களுக்கு

வழங்குவது என்றும் உங்கள்

அன்பு ரசிகன்

பெ: மழை வந்த பின்னால்..

வானவில்லும் தோன்றும்..

உன்னை பார்த்த பின்..னால்..

மழை தோன்றுமே..

ஆ: பூக்கள் தேடித்தானே..

பட்டாம்பூச்சி பறக்கும்..

உன்னை தேடி கொண்டு..

பூக்கள் பறந்ததே...

பெ: மின்னும் விந்தை என்ன என்று

மின்னல் உன்னை கேட்கும்

ஆ: எங்கே தீண்ட வேண்டும் என்று

தென்றல் உன்னை கேட்கும்

உன்னை பார்த்த பூவெல்லாம்

கையெழுத்து கேட்டு நிற்கும்

பெ: நீதான் காதல் நூ..லகம்..

சேர்ந்தேன் புத்தகமாய்..

நீதான் காதல் பூ..மழை..

நனைவேன் பத்திரமா..

ஆ: பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா..

ஒவ்வொன்றும் காவியம்..

பெ: அரை நொடி தான் என்னை பார்த்தாய்

ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்

பனி துளியாய் நீயும் வந்தாய்

பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்..

ஆ: பிரம்மன் செய்த சாதனை

உன்னில் தெரிகிறது..

உன்னை எழுதும் போது தான்

மொழிகள் இனிக்கிறது..

உங்கள் வரவுக்கு நன்றி

Penne Neeyum penna par Unni Menon/Kalpana - Paroles et Couvertures