menu-iconlogo
logo

ஏங்குகிறேன் இயேசுவே என் அருகில் வாருமே

logo
avatar
Uthara Unni Krishnanlogo
Sathya_🎼🎼🎼💕💕💕🎸🎸logo
Chanter dans l’Appli
Paroles
ஏங்குகிறேன் இயேசுவே

என் அருகில் வாருமே

என் சுமையும் போகுமே

உள்ளம் சுகமாகுமே

பாரமுடன் இயேசுவே

உம் முகத்தைப் பார்க்கிறேன்

நல்லவரே இயேசய்யா

என் சுமையும் போக்குமே

பாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்

உம் பார்வையால்

எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்

உம் முகம் காணா நேரம்

பாரமெனத் தோன்றுதே

உம் துணை தேடா நேரம்

சோர்ந்து மனம் வாடுதே

ஏங்குகிறேன் இயேசுவே

என் அருகில் வாருமே

என் சுமையும் போகுமே

உள்ளம் சுகமாகுமே

Music

தாயைப் போல அணைப்பீர்

கண்ணீர் யாவும் துடைப்பீர்

தாயும் கூட மறந்தால்

என்னை நீரே சுமப்பீர்

பேச வாரும் என் தயாளனே

என்னை தாங்கும் உம் கரத்திலே

மாசில்லாத என் குணாளனே

என்னை ஆளும் மனத்திலே

பாசத்தால் பாவம் போக்கும்

பார்வை உம் பார்வையோ

வார்த்தையால் யாவும் ஆக்கும்

ஆற்றல் உம் ஆற்றலோ

ஏங்குகிறேன் இயேசுவே

என் அருகில் வாருமே

என் சுமையும் போகுமே

உள்ளம் சுகமாகுமே

Music

தேவை யாவும் கொடுப்பீர்

உந்தன் நேசம் தருவீர்

நானும் பாதை மறந்தால்

என்னை தேடி வருவீர்

நேசமாகும் உம் நினைவிலே

கண்கள் தேடும் உம் உறவினை

தேற்ற வாரும் என் குமாரனே

என்னை தேற்றும் உம் வரத்திலே

நேசத்தால் நோயை போக்கும்

காயம் உம் காயமோ

வாழ்வினால் சாவை வெல்லும்

காலம் உம் காலமோ

ஏங்குகிறேன் இயேசுவே

என் அருகில் வாருமே

என் சுமையும் போகுமே

உள்ளம் சுகமாகுமே

பாரமுடன் இயேசுவே

உம் முகத்தைப் பார்க்கிறேன்

நல்லவரே இயேசய்யா

என் சுமையும் போக்குமே