menu-iconlogo
huatong
huatong
avatar

Vanna Vanna Komalame (Naatpadu Theral)

Vairamuthu/N.R. Raghunanthan/P. Susheela/K. S. Chithrahuatong
rlaportehuatong
Paroles
Enregistrements
வண்ண வண்ணக் கோமளமே!

ஒரே பாடலில்

மூன்று தலைமுறைகளின் தாலாட்டு!

கூட்டுக் குடும்பம் இருந்த போது

கூட்டுக் குடும்பம் சிதைந்த போது

கூட்டுக் குடும்பம் அழிந்த போது

தாலாட்டு என்ற கலைவடிவம் மூலமாக

சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

ஆராரோ ஆரிரோ

ஆணழகே ஆரிரோ!

ஆராரோ ஆரிரோ

ஆணழகே ஆரிரோ!

வண்ண வண்ணக் கோமளமே!

வலதுகை மாம்பழமே!

இனம்பெருத்த வம்சத்தில்

சனம்பெருத்த குடும்பத்தில்

ஆறாம் திருமகனாய்

ஆளவந்த சோழமன்னா!

ஆராரோ ஆரிரோ

ஆணழகே ஆரிரோ!

புள்ளிமான் கோம்பையிலே

புலிவந்து போகுதின்னு

பொன்வேல் கைவாங்கி

புலியெறிய வந்தவனே!

சிற்றெறும்பு கடிச்சாலும்

சித்தப்பா வருவாரு

தாங்கித் தோள்மாத்தத்

தாய்மாமன் வருவாக

ஆராரோ ஆரிரோ

ஆணழகே ஆரிரோ!

தாத்தாமார் தூக்கிவச்சா

தாடிமுடி குத்துமின்னு

அள்ளி அள்ளி மார்பணைக்க

ஐத்தமார் வருவாக

பாட்டுப் பலபடிச்சுப்

பால்சோறு ஊட்டிவிடும்

கூட்டுக் குடும்பமடா

குலவிளக்கே கண்ணுறங்கு!

குலவிளக்கே கண்ணுறங்கு!

ஆராரோ ஆரிரோ

ஆணழகே ஆரிரோ!

ஆராரோ ஆரிரோ

ஆணழகே ஆரிரோ!

சின்னஞ்சிறு பிறையே

சிகப்புக்கல் ரத்தினமே!

எண்ணக் களஞ்சியமே

ஏலம்பூ வாசகமே!

அப்பன் வெளியூரு

ஆத்தா தனியாளு

கூட்டுக் குடும்பம் இப்போ

குடைசாஞ்சு போனதடா!

தாய்மாமன் பொழப்புக்கு

தாராவி போயிட்டாக

சித்தப்பா எல்லாரும்

சீமையில இருக்காக

ஒம்போலச் செல்வந்தன்

ஒலகத்தில் கண்டதில்ல

எம்போல ஏழையைநீ

எங்காச்சும் கண்டதுண்டா

எச்சிப்பால் தீந்ததடா!

இருந்தவரை ஊட்டிவிட்டேன்

மிச்சப்பால் ஊறும்வரை

மின்மினியே கண்ணுறங்கு!

மின்மினியே கண்ணுறங்கு!

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

மாணிக்க மாமணியே!

மார்க்கண்டன் புத்திரனே!

சோறூட்டச் சொந்தமில்ல

தொட்டிலிட பந்தமில்ல

நாதியத்த குடும்பத்தில்

நாயகமா வந்தவனே

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

ஆத்தா ஒரு மூலையில

அப்பன் ஒரு மூலையில

காத்தாப் பறக்குறாக

Government′u வேலையில

Video பார்த்தபடி

வேலைக்காரி தூளியாட்ட

Audio கேட்டபடி

ஆதவனே கண்ணுறங்கு!

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

ஒத்தையில பொறந்தவனே

உனக்காரும் துணையில்ல

வித்தையெல்லாம் கத்துக்கிட்டு

வெளிநாடு போமகனே!

London திருமகளோ

Los Angeles மருமகளோ

பெத்ததாய் தகப்பனுக்கு

பத்திரிகை கொடுமகனே!

பத்திரிகை கொடுமகனே!

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

ம்-ஹஹம்-ம்ஹம்

Davantage de Vairamuthu/N.R. Raghunanthan/P. Susheela/K. S. Chithra

Voir toutlogo