அன்பே அன்பே தமிழ் வரிகளில்
Music :
Song by Vignesh ooty..
ஆண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
பெண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே
என்னோடு நானில்லையே
ஆண் : ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி
பெண் : ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா
ஆண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
Music:
ஆண் : ஓட்டுக்குள்ளே நத்தையை போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போலே பறகிறதே
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்
பெண் : மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
ஆண் : குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர் தினம்
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே
பெண் : பெற்றவர்கள் முகம் சுற்றி
உள்ளவர்கள் முகம் அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே
ஆண் : ஓ……நீயின்றி நான் இல்லை
அது நிச்சயம்
பெண் : ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா
ஆண் : ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி
Music :
ஆண் : தேவதையின் கதை கேட்டு
சின்ன வயதில் தூங்கினேன்
தூக்கம் பறிக்கும் தேவதையை
நேரில் இன்று பார்க்கிறேன்
பெண் : சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகி போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்
ஆண் : ஓ காதல் ஒரு வானம் அதில்
அலைவது சுகமே
சுற்றி சுற்றி எங்கும் நாம்
நடந்திடலாம்
பெண் : காதல் ஒரு மழை அதில்
தேவை இல்லை குடை வா
சொட்ட சொட்ட அதில் நாம்
நனைந்துடலாம்
ஆண் : ஓ…..நீயின்றி நான் இல்லை
அது நிச்சயம்
பெண் : ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடா
ஆண் : ஒரே முறை ஒரே முறை
ஒரே முறை பாரடி
ஆண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே
நீயின்றி நான் இல்லையே
பெண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே
என்னோடு நானில்லையே
Song by Vignesh ooty...
Thanks for singing....