menu-iconlogo
huatong
huatong
avatar

Sorgame Endralum

Vijay Prakashhuatong
sindi_k-10huatong
Paroles
Enregistrements

ஏ....தந்தன தந்தன தந்தா...

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக் ஈடாகுமா

பல தேசம் முழுதும் பேசும்

மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக் ஈடாகுமா

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ

பாட்டும் இங்க ஏதும் கேக்கவில்லையே

பாடும் குயில் சத்தம் ஆடும் மயில்

நித்தம் பாக்க ஒரு சோலை இல்லையே

வெத்தலைய மடிச்சி மாமன் அத

கடிச்சு துப்ப ஒரு வழி இல்லையே

ஒடி வந்து குதிச்சு முங்கி முங்கி

குளிச்சு ஆட ஒரு ஓடை இல்லையே

இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு

ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு

ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக் ஈடாகுமா

பல தேசம் முழுதும் பேசும்

மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக் ஈடாகுமா

மாடு கண்ணு மேய்க்க மேயுறத

பாக்க மந்தவெளி இங்கு இல்லையே

ஆடு புலி ஆட்டம் போட்டு

விளையாட அரசமர மேடையில்லையே

காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி

ஒட்டி கானம் பாட வழி இல்லையே

தோழிகளை அழைச்சு சொல்லி சொல்லி

ரசிச்சு ஆட்டம் போட முடியலையே

ஒரு எந்திரத்த போல அட இங்கே உள்ள வாழ்க்கை

இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை

நம்மூர போல ஊரும் இல்ல

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக் ஈடாகுமா

பல தேசம் முழுதும் பேசும்

மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக் ஈடாகுமா

Davantage de Vijay Prakash

Voir toutlogo