உடலும்
இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம்
நம்மை எழுதும்
கவிதை சாசனம்
நாளெல்லாம்
பாடலாம்
காதலின் கீர்த்தனம்
கண்களின்
பார்வையோ
காமனின் சீதனம்
தேகம் என்பது
கோயில் சிற்பமா?
கூந்தல் என்பது
நாக சர்ப்பமா?
உந்தன் மூச்சிலும்
இந்த வெப்பமா?
ஓர பார்வையில்
நூறு அர்த்தமா
தேவ மல்லிகை
பூத்து நின்றதா?
காதல் தேன்மழை
ஊற்றுகின்றதா?
தே னில் நீ ராடும் வேளை வந்ததா?
உடலும்
இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம்
நம்மை எழுதும்
கவிதை சாசனம்
தாத்தான் தாத்தான் ஹான்
தாத்தான் தாத்தான் ஹான்
தார ராரே ஹான்
தார ராரே ஹான்
உந்தன் கண்களால்
நானும் பார்க்கிறேன்
உந்தன் பாடலை
எங்கும் கேட்கிறேன்
உந்தன் மூச்சிலே
மூச்சு வாங்கினேன்
உன்னை எண்ணியே
மண்ணில் வாழ்கிறேன்
இன்னும் ஆயிரம்
ஜென்மம் வேண்டுமே
உந்தன் காதலின்
சொந்தம் வேண்டுமே
நீதான் நீதானே என்றும் வேண்டுமே
உடலும் இந்த உயிரும்
உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும்
கவிதை சாசனம்
நாளெல்லாம்
பாடலாம்
காதலின் கீர்த்தனம்
கண்களின்
பார்வையோ
காமனின் சீதனம்