menu-iconlogo
logo

Ulagam Oruvanukka

logo
Lirik
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்

விடை தருவான் கபாலி தான்

கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்

உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்

விடை தருவான் கபாலி தான்

கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்

நீ நீயாய் வந்தாய் தீயின் கருவாய்

கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே

பூவின் நிழலாய் புல்லாங்குழலாய்

உனை வெளியிடு துளிர் விடு பலியாடாய் நினையாதே

விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு

நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு

வானம் உனதே பாதி வழியில் பறவை பறக்க மறக்காதே

ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு

கபாலி வாரான் கையத் தட்டு

பம்பரம் போல சுத்திக்கிட்டு

பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு

ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள

இனிமே வாரான் நாட்டுக்குள்ள

எதிரி கூட்டம் ஆடிப் போச்சே

குருதியில் நெருப்பு தான் கூடிப் போச்சே

கபாலி…

இதுக்குப் பேர் தான் தலைவர் அதிரடி

கபாலி… கிங் ஆஃப் டைம்

இன் த கான்கிரீட் ஜங்கிள் வாச்சிங் ஓவர் மை ப்ரைடு

நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன போயா

தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன் டா

ஐ’ம் ஸ்டாக்கிங் மை ப்ரே வோன்ட் லெட் ஹிம் கெட் அவே

வித் த திங்ஸ் தட் தே டூ பேட் மூவ்ஸ் தட் தே மேக்

வந்தவன போனவன வாழ வச்சவன்

இனி வாழ்ந்து காட்டப் போறான் வாய மூடி கவனி

ட்ரெஸ்டு டு கில் கால் இட் கபாலீஸ்வேர்

கம் அன்ட் கெட் சம் லை த கே டௌன் க்லான்

இட் ஏய்ன்ட் அபௌட் த சைஸ் ஆஃப் த டாக் இன் த ஃபைட்

பட் த ஸ்பிரிட் ஆஃப் த ஃபைட் இன் த டாக் தாட்ஸ் ரைட்

வேரும் பூவும் வேறில்லை கருமேகம் போலே நீரில்லை

அலை கடல் அடங்குமோ அதிகாரக் குரலுக்கு எப்போதும்

நீரின் வீழ்ச்சி நீ தானே உனை நீந்திக் கடக்க முடியாதே

ஒரே பனித் துளி அது எரிமலை அணைத்திடுமா

மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது

இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே

மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது

இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே

விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு

நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு

வானம் உனதே பாதி வழியில் பறவை பறக்க மறக்காதே

ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு

கபாலி வாரான் கையத் தட்டு

பம்பரம் போல சுத்திக்கிட்டு

பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு

ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள

இனிமே வாரான் நாட்டுக்குள்ள

எதிரி கூட்டம் ஆடிப் போச்சே

குருதியில் நெருப்பு தான் கூடிப் போச்சே

Ulagam Oruvanukka oleh Ananthu/Santhosh Narayanan/Gana Bala/Roshan Jamrock - Lirik & Cover