menu-iconlogo
huatong
huatong
avatar

Madura Marikozhunthu Vaasam

K. S. Chithra/Manohuatong
mpalmer2002huatong
Lirik
Rekaman
மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடைய நேசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடைய நேசம்

மானோட பார்வ மீனோட சேரும்

மானோட பார்வ மீனோட சேரும்

மாறாம என்ன தொட்டு பேசும்

இது மறையாத என்னோடைய பாசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடைய நேசம்

பொட்டுனா பொட்டு வெச்சு

வெட்டு வெட்டுனு வெட்டிப்புட்டு

பட்டுனு சேலைய கட்டி

எட்டு வச்சு நடந்துகிட்டு

பொட்டுனா பொட்டு வெச்சு

வெட்டு வெட்டுனு வெட்டிப்புட்டு

பட்டுனு சேலைய கட்டி

எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுனா கட்டி புட்ட

நெஞ்ச கொஞ்சம் கட்டிப்புட்ட

வெட்டும் இரு கண்ண வெச்சு

எண்ண கட்டி போட்டுபுட்ட

கட்டு அது உனக்கு மட்டும் தானா

இந்த சிட்டுங்கூட சிக்கியது ஏனா

எப்போதோ விட்ட கொர மாமா

அது இரு உசுர காட்டுதய்யா தானா

இது இப்போது வாட்டுதென்ன

பாட்டு ஒன்ன அவுத்து வுடு

மதுர ..

மரிக்கொழுந்து வாசம்

என் ராசாவே உன்னோடைய நேசம்

அடி மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாவே உன்னோடைய நேசம்

மெட்டுனா மெட்டு கட்டி

இட்டு கட்டி பாடிகிட்டு

கட்டுனா ராகம் என்னும்

மால ஒன்ன கட்டிப்புட்டு

மெட்டுனா மெட்டு கட்டி

இட்டு கட்டி பாடிகிட்டு

கட்டுனா ராகம் என்னும்

மால ஒன்ன கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அத

என்கழுத்தில் போட்டுபுட்ட

ஒன்ன மட்டும் விட்டுபுட்ட

தாலி கட்ட மறந்துப்புட்ட

நீ தானே என்னோடைய ராகம்

என் நெஞ்செல்லாம் ஒன்னோடைய தாளம்

ஏழேழு ஜென்மம் ஒன்ன பாடும்

ஒன்னோட பாட்டுக்காரன் பாட்டும்

என் மனசேனோ தவிக்குதடி

செறகடிச்சு பறக்குதடி

மதுர ...

மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடைய நேசம்

மானோட பார்வ மீனோட சேரும்

மானோட பார்வ மீனோட சேரும்

மாறாம என்ன தொட்டு பேசும்

இது மறையாத என்னோடைய பாசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடைய நேசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாவே உன்னோடைய நேசம்

Selengkapnya dari K. S. Chithra/Mano

Lihat semualogo