அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
காமன் கலைக்கோர் கல்லூரி
கண்டேன் இரு விழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம்
கேட்டேன் கிளி மொழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம்
கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல்
சிந்தும் குறு நகையில்
நான் மூன்றாம் தமிழை பார்க்கின்றேன்
கண்ணே உந்தன் இடையசைவில்
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
என்றும் இளமை மாறாமல்
வாழும் சரித்திரமே
என்றும் இளமை மாறாமல்
வாழும் சரித்திரமே
நீ எந்தன் தலைவன் என்றென்னும்
எண்ணம் இனித்திடுமே
நீ எந்தன் தலைவன் என்றென்னும்
எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை
சொல்லில் வருவதில்லை
நான் உன்னால் அடையும் பேரின்பம்
அந்த சொர்க்கம் தருவதில்லை
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
ஆடை விலக்கும் பூங்காற்றை
நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆடத் துடிக்கும் தேனாற்றை
நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில்
நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல்
இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
அழகெனும் ஒவியம் இங்கே
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே