menu-iconlogo
huatong
huatong
avatar

Mayanginen Solla Thayanginen

P. Jayachandran/P.suseelahuatong
riyazsmulianhuatong
Lirik
Rekaman
பெ:ஆ....ஆ ....ஆ...

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

ஆ: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே...

திரைப்படம்: நானே ராஜா

நானே மந்திரி (1985)

இசை : இளையராஜா

பாடியவர்கள்: P.ஜெயச்சந்திரன், P.சுசீலா

## அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்

## பாடல் அதன் Original Scale க்கு

## மாற்றப்பட்டுள்ளது.

ஆ: உறக்கமில்லாமல் அன்பே

நான் ஏங்கும் ஏக்கம் போதும்

இரக்கமில்லாமல் என்னை

நீ வாட்டலாமோ நாளும்..

வாடைக்காலமும் நீ வந்தால்

வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்

கோடைக்காலமும் நீ வந்தால்

குளிர்ச்சி காணலாம்

பெ: எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ

துன்பக் கவிதையோ கதையோ..

ஆ: இரு கண்ணும்.. என் நெஞ்சும்

பெ: இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ….

ஆ: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

பெ: தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

ஆ: இங்கு நீயில்லாது

வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே….

NOT a Free Karaoke Track!

Strictly NO downloads!

ஆ: ஒரு பொழுதேனும்

உன்னோடு சேர்ந்து வாழணும்

உயிர் பிரிந்தாலும் அன்பே

உன் மார்பில் சாயணும்..

பெ: மாலைமங்களம் கொண்டாடும்

வேளை வாய்க்குமோ..

ஆ: மணவறையில் நீயும் நானும்தான்

பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

பெ: ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்

உந்தன் உறவுதான் உறவு!

ஆ: அந்தநாளை.. எண்ணி நானும்..

பெ: அந்தநாளை எண்ணி நானும் வாடினேனே..

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

ஆ: தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

பெ: இங்கு நீயில்லாது

வாழும் வாழ்வுதான் ஏனோ..

ஆ: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே….

Selengkapnya dari P. Jayachandran/P.suseela

Lihat semualogo