menu-iconlogo
logo

Azhagiya Thamizh Magal

logo
Lirik
F:ஆனிபொன் தேர் கொண்டு

மாணிக்க சிலையென்று

வந்தாய் நின்றாய் இங்கே

காணிக்கை பொருள் ஆகும்

காதல் என் உயிர் ஆகும்

நெஞ்சை தந்தேன் அங்கே

M:அழகிய தமிழ் மகள் இவள்

இரு விழிகளில் எழுதிய மடல்

மெல்ல மொழிவது உறவெனும் குறள்

படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்

F:அழகிய தமிழ் மகள் இவள்

இரு விழிகளில் எழுதிய மடல்

மெல்ல மொழிவது உறவெனும் குறள்

படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்

M:வான் உலகம் என்னும்

மாளிகையில் மின்னும்

பூ மகளின் கன்னம்

தேன் நிலவின் வண்ணம்

வான் உலகம் என்னும்

மாளிகையில் மின்னும்

பூ மகளின் கன்னம்

தேன் நிலவின் வண்ணம்

F:நீல விழி பந்தல்

நீ இருக்கும் மேடை

கோலம் இடும் ஆசை

தூது விடும் ஜாடை

F:நீல விழி பந்தல்

நீ இருக்கும் மேடை

கோலம் இடும் ஆசை

தூது விடும் ஜாடை

இளமையில் இனியது சுகம்

இதை பெறுவதில் பல வித ரகம்

இந்த அனுபவம் தனி ஒரு விதம்

மலரும் வளரும் பல நாள் தொடரும்

M:அழகிய தமிழ் மகள் இவள்

இரு விழிகளில் எழுதிய மடல்

மெல்ல மொழிவது உறவெனும் குறள்

படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்

F:பாலில் விழும் பழம் எனும்

போதை பெறும் இளம் மனம்

மெல்ல தான் அள்ளி கொள்ள தான்

M:காதல் நிலா முகம் முகம்

கண்ணில் உலா வரும் வரும்

காதல் நிலா முகம் முகம்

கண்ணில் உலா வரும் வரும்

மெல்ல தான் நெஞ்சை கிள்ள தான்

F:கொடி இடை விளைவது கனி

இந்த கனி இடை விளைவது சுவை

அந்த சுவை பெற நமக்கென்ன குறை

நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்

M :அழகிய தமிழ் மகள் இவள்

இரு விழிகளில் எழுதிய மடல்

மெல்ல மொழிவது உறவெனும் குறள்

படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்

M:பாவை உன்னை நினைக்கையில்

பாடல் பெரும் கவி குயில்

பக்கம் வா இன்னும் பக்கம் வா

F:கோவை இதழ் இதோ இதோ

கொஞ்சும் கிளி அதோ அதோ

கோவை இதழ் இதோ இதோ

ொஞ்சும் கிளி அதோ அதோ

இன்னும் நான் சொல்ல

இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்

M:மழை தரும் முகில் என குழல்

நல்ல இசை தரும் குழல் என குரல்

உயிர் சிலை என உலவிடும் உடல்

நினைத்தேன் அணைத்தேன்

மலர் போல் பறித்தேன்

F:அழகிய தமிழ் மகள் இவள்

இரு விழிகளில் எழுதிய மடல்

மெல்ல மொழிவது உறவெனும் குறள்

படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்

Azhagiya Thamizh Magal oleh P. Susheela - Lirik & Cover