menu-iconlogo
logo

Anbulla Maan vizhiyae

logo
Lirik
திரைப்படம் : குழந்தையும் தெய்வமும்

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்: அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம் நான்

எழுதுவ தென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை

(இசை)

பெண்: அன்புள்ள மன்னவனே

ஆசையில் ஓர் கடிதம்

அதைக் கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதி வந்தேன்

இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்: நலம் நலம்தானா முல்லை மலரே

சுகம் சுகம்தானா முத்து சுடரே

நலம் நலம்தானா முல்லை மலரே

சுகம் சுகம்தானா முத்து சுடரே

இளைய கன்னியின் இடை மெலிந்ததோ

எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ

வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ

வாடைக் காற்றிலே வாடி நின்றதோ

ஆண்: அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை

(இசை)

பெண்: நலம் நலம்தானே நீ இருந்தால்

சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

நலம் நலம்தானே நீ இருந்தால்

சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது இயற்கையல்லவா

நடை தளர்ந்தது நாணம் அல்லவா

வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா

வாழ வைத்ததும் உண்மை அல்லவா

பெண்: அன்புள்ள மன்னவனே

ஆசையில் ஓர் கடிதம்

அதைக் கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதிவந்தேன்

ஆண்: அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம் நான்

எழுதுவ தென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை

பாடலாசிரியர் : கண்ணதாசன்

நடிகர்கள்: ஜெய்சங்கர், ஜமுனா

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

பெண்: உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்

எனக்கொரு பாடம் கேட்டு கொண்டேன்

ஆண்: பருவம் என்பதே பாடம் அல்லவா

பார்வை என்பதே பள்ளி அல்லவா

இருவரும்: ஒருவர் சொல்லவும்

ஒருவர் கேட்கவும்

இரவும் வந்தது நிலவும் வந்தது

ஆண்: அன்புள்ள மான்விழியே

பெ:ஆசையில் ஓர் கடிதம்

ஆண்: அதைக் கைகளில் எழுதவில்லை

பெண்: இரு கண்களில் எழுதி வந்தேன்

பாடலைத் தேர்ந்தெடுத்துப்

பாடியமைக்கு மிக்கநன்றி

Anbulla Maan vizhiyae oleh Tm Soundararajan/P. Susheela - Lirik & Cover