menu-iconlogo
huatong
huatong
avatar

Penne Neeyum Pennaa (Short Ver.)

Unni Menon/Kalpanahuatong
smorris_2_2000huatong
Lirik
Rekaman
புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை

உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா

சீன சுவரை போலே எந்தன் காதல் கூட

இன்னும் நீளமாகும் உனக்கு தெரியுமா

பூங்கா என்ன வாசம் என்று

உந்தன் மீதுதெரியும்

தந்தம் என்ன வண்ணம் என்று

உன்னை பார்க்க தெரியும்

காதல் வந்த பின்னாலே

கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

கம்பன் ஷெல்லி சேர்ந்து தான்

கவிதை எழுதியது

எந்தன் முன்பு வந்து தான்

பெண்ணாய் நிற்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

மழைவந்த பின்னால் வானவில்லும் தோன்றும்

உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே

பூக்கள் தேடிதானே பட்டாம்பூச்சி பறக்கும்

உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே

மின்னும் விந்தை என்ன என்று

மின்னல் உன்னை கேட்கும்

எங்கே தீண்ட வேண்டும் என்று

தென்றல் உன்னை கேட்கும்

உன்னை பார்த்த பூவெல்லாம்

கையெழுத்து கேட்டு நிற்கும்

நீ தான் காதல் நூலகம்

சேர்ந்தேன் புத்தகமாய்

நீ தான் காதல் பூ மழை

நனைவேன் பத்திரமாய்

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

அரை நொடி தான் என்னை பார்த்தாய்

ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்

பனி துளியாய் நீயும் வந்தாய்

பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்

பிரம்மன் செய்த சாதனை

உன்னில் தெரிகிறது

உன்னை எழுதும் போது தான்

மொழிகள் இனிக்கிறது

Selengkapnya dari Unni Menon/Kalpana

Lihat semualogo