menu-iconlogo
huatong
huatong
avatar

Vizhiye Vilakkondru

Vijayakanthhuatong
otxxice1huatong
Lirik
Rekaman
ஆ: விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பெ: விளக்கேற்றும் மாலை.. இது என்ன லீலை..

ஆ: விளங்காததா.. இனிமேல்..

பெ: விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பதிவேற்றம்: அருண்..

ஆ: பூங்கூந்தலோ கார்மேகமோ

பூங்காற்றிலே ஊர்கோலமோ

ஓய்வின்றி காண்கின்ற ஆலிங்கனம்..

உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்..

பெ: என் கண்களில் உனை

ரசித்தேன்… சிறையெடுத்தேன்..

உன் நெஞ்சிலே.. அனுதினமும்..

இருக்க வைத்தேன்..

ஆ: நான் உன் உடல்.. உயிர் நீதான்…

நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்

பெ: விழியே விளக்கொன்று ஏற்று

விழுந்தேன் உன்மார்பில் நேற்று

ஆ: விளக்கேற்றும் மாலை.. இது என்ன லீலை..

பெ: விளங்காததா இனிமேல்…

பதிவேற்றம்: அருண்..

ஆ: நான் கேட்டது தேன் பூவிதழ்…

என் கண்மணி எங்கே பதில்..

பெ: நான் கொண்ட யாவையும் நீ சேரத்தான்

நீ தந்து என் பசி நான் ஆறத்தான்

ஆ: தேகம் இது.. ஒரு

விருந்து.. திருமருந்து..

மோகங்களை.. அருகிருந்து கொடுத்து விடு..

பெ: பரிமாறினேன் .. பதமானேன்..

பாவங்களில் பண்பாடினேன்…

ஆ: விழியே விளக்கொன்று ஏற்று

பெ: விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆ: விளக்கேற்றும் மாலை..

பெ: இது என்ன லீலை..

ஆ: விளங்காததா…

பெ: இனிமேல்..

ஆ: விழியே விளக்கொன்று ஏற்று

பெ: விழுந்தேன் உன் மார்பில் நேற்று

Selengkapnya dari Vijayakanth

Lihat semualogo