M உசிலம்பட்டிபெண்குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கி போச்சு
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கி போச்சு
கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேண்டி
உன் கூடையில வெச்ச பூவு
கூடலூரில் வீசு தடி
குதி போட்டு வந்தேண்டி
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கிப் போச்சு
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
M கண்டமனூரு மைதாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
F மைய வைக்கும் சாக்க வெச்ச
கைய்ய வெப்பே தெரியாதா
M அலங்கா நல்லூர் ஜல்லிக்
கட்டு சேர்ந்து போனால் ஆகாதா
F மாடு புடிச்சி முடிச்ச கைய்யில்
மயில புடிப்பே தெரியாதா
M மயிலே மயிலே இறகொண்ணு போடு
F தானா விழுந்தா அது உம் பாடு
M இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும்
அதுக்கும் காலம் வரும்
F உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளத் தாச்சி
F உசிலம் பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
M வெடலப் பொண்ணு நுனி நாக்கு
வெத்தலையாலே செவந்திருக்கு
F வேப்ப மரத்து கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு
M இடுப்பு சேல இடை வெளியில்
எனக்கு மட்டும் இடமிருக்கு
F ஆச பட்ட மாமனுக்கு
ஆண்டிப் பட்டி மடமிருக்கு
M தணியும் தணியும் தானா தணியும்
F தடியால் அடிச்சா கொடியா மலரும்
M மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அது தான் பெண்ணின் குணம்
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என்
கழுத்து சுளுக்கி போச்சு
F உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே
நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
அம்மா நெட்லயே
உக்காந்துருக்கான்
அப்பா இப்போ நீ எவ்வளவு கூப்பிட்டாலும்
காதிலே விழாது, பேசாம போய்
அவனுக்கு மெசேஜ் அனுப்பு
சாப்பிட எழுந்து வாடான்னு.