உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்து விடு
காலம் தடுத்தால் என்னை
மண்ணோடு கலந்து விடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்து விடு
என் சுவாசக் காற்று வரும் பாதை
பார்த்து உயிர் தாங்கி நானிருப்பேன்
மலர் கொண்ட பெண்மை வாராமல்
போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை
பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும்
பெண்ணே அதற்கா
காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன்
கையில் கொடுத்து விட்டேன்.
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு
கரைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்து விடு
காலம் தடுத்தால் என்னை
மண்ணோடு கலந்து விடு
உயிரே உயிரே வந்து என்னோடு
கலந்து விடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த
பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த
போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும் பாறை பலதாண்டி வேராக
வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக
வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணிரும்
தித்திக்கின்றாதே.
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
மழைபோல் மழைபோல் வந்து
மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம்போல் மனம்போல் உந்தன்
ஊனோடு உறைந்து விட்டேன்
உயிரே உயிரே இன்று
உன்னோடு கலந்து விட்டேன்
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்து விட்டேன்