menu-iconlogo
huatong
huatong
avatar

manithan manithan

Chandrabosehuatong
Pushkalaramanhuatong
Testi
Registrazioni
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?

வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?

வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?

பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்

சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..

அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?

அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?

கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா ?

கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா ?

கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா

கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்…

மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?

வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?

வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?

பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்

சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..

ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா ?

இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா ?

காதல் என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா ?

கற்பைமட்டும் கரண்சி நோட்டில் கறப்பவன் மனிதனா ?

தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும்

துடிப்பவன் எவனடா அவனே மனிதன்…

மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?

வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?

வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?

பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்

சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..

Altro da Chandrabose

Guarda Tuttologo