menu-iconlogo
logo

Neethane Naal Thorum

logo
avatar
faralogo
prettywoman_362436logo
Canta nell'App
Testi
பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம…ம்ம்ம்ம்ம…

ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்…

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்

உறவு ராகம் இதுவோ

இது உதயமாகி வருதோ

உனது தாகம் விளைய

இது அடிமையான மனதோ

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

பெண் : ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே

உன்னைக் கண்டதாலே

பாவை என்னையே பாட வைத்ததே

அன்பு கொண்டதாலே

உன்னைப் பார்க்கையில்

என்னைப் பார்க்கிறேன்

உந்தன் காந்தக் கண்ணில்

நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்

இன்று உந்தன் கையில்

எந்தன் ஆவல் தீருமோ

உந்தன் பாத பூஜையில்

இந்த ஜீவன் கூடுமோ

உந்தன் நாத வேள்வியில்

எண்ணம் நீ வண்ணம் நீ

இங்கு நீ எங்கும் நீ

வேதம் போலே உந்தன் பேரை

ஓதும் உள்ளம் தான்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

பெண் : நாத வெள்ளமும் கீத வெள்ளமும்

வாரித் தந்தது நீ

நாளும் என்னையே வாழவைக்கவே

வாசல் வந்தது நீ

ஆண் : வீணை தன்னையே கையில் ஏந்திடும்

ஞானவல்லியே நீ

வெள்ளைத் தாமரை பூவில் மேவியே

ஆளும் செல்வியே நீ

எந்தன் வாக்கு மேடையில்

இன்று ஆடும் வாணியே

எந்த நாளும் மேன்மையில்

என்னை ஏற்றும் ஏணியே

அன்னை நீ அல்லவா

இன்னும் நான் சொல்லவா

நீதான் தெய்வம் நீதான் செல்வம்

கீதம் சங்கீதம்

நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்

பெண் : உறவு ராகம் இதுவோ

இன்று உதயமாகி வருதோ

உனது தாகம் விளைய

இது அடிமையான மனதோ

ஆ & பெ : நீதானே நாள்தோறும்

நான் பாடக் காரணம்

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்