menu-iconlogo
logo

Venmegam

logo
Testi

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே…

ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?

பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே…

ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

மஞ்சள் வெயில் நீ..

மின்னல் ஒளி நீ..

உன்னைக் கண்டவரை கண் கலங்க

நிற்க வைக்கும் தீ…

பெண்ணே என்னடி..

உண்மை சொல்லடி..

ஒரு புன்னகையில் பெண்ணினமே

கோபப்பட்ட தென்னடி…

தேவதை வாழ்வது வீடில்லை கோயில்

கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்

ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட

கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்

கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே…

ஒரு நெஞ்சம் திண்டாடுதே…