menu-iconlogo
huatong
huatong
hariharan-anuradha-sriram-a-r-rahman-jeans-anbe-anbe-s2-c2-short-cover-image

அன்பே அன்பே கொல்லாதே Short

Hariharan, Anuradha Sriram, A. R. Rahman, Jeans, Anbe anbe, S2, C2huatong
bentleyg9huatong
Testi
Registrazioni
நல்வரவு

Priya Storybrooke

கொடுத்து வைத்த பூவே பூவே

அவள் கூந்தல் மணம் சொல்வாயா

கொடுத்து வைத்த நதியே நதியே

அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கொலுசே

காலழகை சொல்வாயா

கொடுத்து வைத்த மணியே

மாரழகை சொல்வாயா

ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ...

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி

அங்கே உனக்கொரு வீடு செய்வேன்

உன்னியிர் காக்க என்னுயிர் கொண்டு

உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

ஆ... ஆ... ஆ...

மேகத்தை பிடித்து மெத்தைகள் அமைத்து

மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்

தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது

நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

பால்வண்ண பறவை குளிப்பதற்காக

பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்

தேவதை குளித்த துளிகளை அள்ளி

தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே

புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரை குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே

ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ...

Thanks for joining