கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும்
பூவிது பூவிது
கை அணைக்கும்
நாளிது நாளிது
பொன் என மேனியும்
மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை
பின்னிட பின்னிட
வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேன்
மான்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பொன் அழகே பூ அழகே என் அருகே
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்