menu-iconlogo
logo

Kannalane (feat. Lalitha Vijayakumar, Valappakudi Veera Shankar & Kutti Revathi)

logo
Testi
கண்ணாளனே

பாவையிங்கே

முப்போதும் நோன்பில் வேகின்றேன்

சித்த நோய்கொண்டேன்

உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்

முத்தாரம்போல்

மார்பினிலே

எப்போதும் தொட்டு வாழ்த்திடுவேன்

முத்தம் தாவென்னும்

உன்வாயின் எச்சில் தாவென்றேன்

சொல்லாலே தீராதே

மலர்வாசம் காற்றோடு

பெண்மேலே சேலை

முள்போல தைப்பதேன்

உன்பார்வை தூமலர்

அம்பினைப்போல வீழ

நானிங்கே நீர்மேலே

தெப்பம்போல ஆடினேன்

கைத்தலம் தாராயோ

மன்மதனோயே தீர

நான் இங்கே தேகத்தைக்

கொண்டாடும் ஆணே

கள்ளம் வேண்டாமே கண்கள் மூடாமல்

மிச்சம் வாழவே வா

உள்ளம் மாறாமல் ஒன்றும் பேசாமல்

உச்சம் காணுவோம் நாம்

கண்ணாளனே

பாவையிங்கே

முப்போதும் நோன்பில் வேகின்றேன்

சித்த நோய்கொண்டேன்

உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்

பேரின்ப கூடலிலே

சேயிழை சேர்ந்திடவே

வேகமாய் ஓடோடிவா

காயத்தின் மோகத்தை

நானிங்கே தாங்கிடவே

மேகமாய் நீராட்டவா

யாதென்றும் வாராதே

தீதென்றும் நேராதே

வேடிக்கை காட்டாதே

நீ ஒன்றும் கேளாதே

ஏன் என்றும் பாராதே

வேதனை கூட்டாதே

எந்தன் மேலே

கண்ணம் வைத்தாய்

கள்ளன் போலே

உள்ளே வந்தாய்

உன்னை நீங்கா அன்றில் ஆவேன்

தண்ணீர் மீதே

எண்ணை ஆனேன்

கள்ளம் வேண்டாமே

கண்கள் மூடாமல்

மிச்சம் வாழவே வா

உள்ளம் மாறாமல்

ஒன்றும் பேசாமல்

உச்சம் காணுவோம் நாம்

கண்ணாளனே

பாவையிங்கே

முப்போதும் நோன்பில் வேகின்றேன்

சித்த நோய்கொண்டேன்

உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்

தாமரை வாடிடவே

மையலும் நீண்டிடுதே

நீயென்னை தீண்டாய்யய்யா

மாமழை வேண்டியே

பூமியும் பூண்டிடுதே

கோடையின் ஆடையம்மா

பூங்கொத்து நீயாவாய்

நாளொன்றும் வாடாமல்

தோள்தொட்டு வாழாயோ

நீர்விழிகள் ஆறாகும்

நீயென்னைச் சேராமல்

வாழ்விங்கே போராகும்

உள்ளம் நீயே

உள்ளில் சேர்த்தாய்

வள்ளல் போலே

அள்ளிச் சேர்ப்பாய்

என்னில் ஏனோ

ஏக்கம் சேர்த்தாய்

துக்கம் நீக்க

பக்கம் வாராய்

கள்ளம் வேண்டாமே

கண்கள் மூடாமல்

மிச்சம் வாழவே வா

உள்ளம் மாறாமல்

ஒன்றும் பேசாமல்

உச்சம் காணுவோம் நாம்

கண்ணாளனே

பாவையிங்கே

முப்போதும் நோன்பில் வேகின்றேன்

சித்த நோய்கொண்டேன்

உன்னாலே சொற்கள் தோற்கின்றேன்

முத்தாரம்போல்

மார்பினிலே

எப்போதும் தொட்டு வாழ்த்திடுவேன்

முத்தம் தாவென்னும்

உன்வாயின் எச்சில் தாவென்றேன்

சொல்லாலே தீராதே

மலர்வாசம் காற்றோடு

பெண்மேலே சேலை

முள்போல தைப்பதேன்

உன்பார்வை தூமலர்

அம்பினைப்போல வீழ

நானிங்கே நீர்மேலே

தெப்பம்போல ஆடினேன்

கைத்தலம் தாராயோ

மன்மதனோயே தீர

நான் இங்கே தேகத்தைக்

கொண்டாடும் ஆணே

கள்ளம் வேண்டாமே

கண்கள் மூடாமல்

மிச்சம் வாழவே வா

உள்ளம் மாறாமல்

ஒன்றும் பேசாமல்

உச்சம் காணுவோம் நாம்

கள்ளம் வேண்டாமே

கண்கள் மூடாமல்

மிச்சம் வாழவே வா

உள்ளம் மாறாமல்

ஒன்றும் பேசாமல்

உச்சம் காணுவோம் நாம்