ஆண்: சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்
மேற்கால வெயில் சாய
வாய்க்காலில் வெல்லம் பாய
மயக்கம் ஒரு கெரக்கம்
இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொரக்கும்
பெண்: சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்
ஆண் : மெல்ல மெல்ல தாளம் தட்ட
மத்தளமும் சம்மதத்த தருமோ
கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ
பெண்: அஞ்சு விரல் கோலம் போட
அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ
அன்னாடம் தான் ஆசை என்னும்
நோய் வருமோ
ஆண் : மொட்டு விரிந்தால்
வண்டு தான் முத்தம் போடாதோ
பெண் : முத்தம் விழுந்தால்
அம்மம்மா வெட்கம் கூடாதா
ஆண் : கட்டி புடிச்சிருக்க
மெட்டு படிச்சிருக்க
எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு
பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி..
ஆண்: ம்ம்ம்ம்..
பெண்:வந்ததொரு ஜாதி மல்லி
ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆஆ
பெண் : உன்ன விட்டு நான் இருந்தால்
அந்தி வரும் சந்திரனும் சுடுமோ
மன்மதனின் அம்புகளும் பா....ய்ந்திடுமோ
ஆண் : வெண்ணிலவ தூது விடு
வண்ண மயில் உன் அருகில் வருவேன்
பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்
பெண்: என்னை கொடுப்பேன்
கொண்டு போ உந்தன் கையோடு
ஆண் : ஓட்டி இருப்பேன்
ஆடை போல் உந்தன் மெய்யோடு
பெண் : தன்னந்தனிச்சிருக்க
உன்னை நினச்சிருக்க
பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது
ஆண்: சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்
பெண் :மேற்கால வெயில் சாய
ஆண் : ஆஹா
பெண்: வாய்க்காலில் வெல்லம் பாய
ஆண் : மயக்கம் ஒரு கெரக்கம்
இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொரக்கும்
பெண்: சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம்... பாடுதொரு தேவாரம்....