menu-iconlogo
huatong
huatong
p-unni-krishnan-meenamma-cover-image

Meenamma

P. Unni Krishnanhuatong
sharonc813huatong
Testi
Registrazioni
மீனம்மா

அதிகாலையிலும் அந்தி மாலையிலும்

உந்தன் ஞாபகமே

அம்மம்மா முதல் பார்வையிலே

சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும்

சின்னச் சின்ன மோதல்களும்

மின்னல் போல வந்து வந்து போகும்

ஊடல் வந்து ஊடல் வந்து

முட்டிக் கொண்டபோதும்

இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

இரு மாதங்கள் நாட்கள் செல்ல

ஆ....நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

ஆ...மீனம்மா

அதிகாலையிலும் அந்தி மாலையிலும்

உந்தன் ஞாபகமே

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்

இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்

புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு எனை எட்டிப் பார்ப்பதற்கு

அதை மூடாமல் தாழ் போடாமல்

எனைத் தொட்டுத் தீண்டுவதா

மாமங்காரன் தானே பாயைப் போட்டு தானே

மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்

தொடலாம்

மீனம்மா... மழை உன்னை நனைக்கும்

இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்

அம்மம்மா நீ உன்னை அணைத்தால்

இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

துத் துத் துது... துத்

துதுது.துத் துத் துது... துது

துத் துத் துது... துத்

துதுது.துத் துத் துது... துது

அன்று காதல் பண்ணியது

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல்

இந்த நெஞ்சில் நிற்கிறது

அங்கு பட்டுச் சேலைகளும்

நகை நட்டும் பாத்திரமும்

உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே

அது கண்ணில் நிற்கிறது

ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே

ஆசை தீரவே பேசலாம்

முதல் நாள் இரவு

துத் துத் துது... துத்

துதுது.துத் துத் துது... துது

மீனம்மா

உன்னை நேசிக்கவும் அன்பு வாசிக்கவும்

தென்றல் காத்திருக்கு

அம்மம்மா...உன்னை காதலித்து புத்தி பேதலித்து

புஷ்பம் பூத்திருக்கு

உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு

என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக

உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று

ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

இன்று மோகனம் பாட்டெடுத்தோம்

ஆ...ஆ முழு மூச்சுடன் காதலித்தோம்

ஆ...ஆ மீனம்மா

அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

Altro da P. Unni Krishnan

Guarda Tuttologo