ஆ: ஆ ஆ ஆ
பெ: ஆ ஆ ஆ
ஆ: சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
பெ: என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்ல பகலா
எனக்கும் மயக்கம்
ஆ: நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
பெ: நானும்தான் நெனச்சேன்
ஆ: ஞாபகம் வரல
பெ: யோசிச்சா தெரியும்
ஆ: யோசனை வரல
பெ: தூங்கினா விளங்கும்
ஆ: தூக்கந்தான் வரல
பெ: பாடுறேன் மெதுவா
உறங்கு
ஆ: சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
பெ: என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்ல பகலா
எனக்கும் மயக்கம்
ஆ: எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
பெ: சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது
ஆ: சொர்க்கம் விண்ணிலே பிறக்க
பெ: நாயகன் ஒருவன்
ஆ: நாயகி ஒருத்தி
பெ: தேன்மழை பொழிய
ஆ: பூவுடல் நனைய
பெ: காமனின் சபையில்
ஆ: காதலின் சுவையில்
பெ: பாடிடும் கவிதை சுகந்தான்
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
ஆ: என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்ல பகலா
எனக்கும் மயக்கம்