menu-iconlogo
logo

Potta Pulla

logo
Testi
ஒத்த நொடியிலதான்

எனக்கு சித்தம் கலங்கிருச்சே

மொத்த உலகமுமே அடடா

சுத்த மறந்துருச்சே

நெத்தி நடுவுல லங்கரு சுத்துது

நெஞ்சு குழியில கவுலி கத்துது

தீகங்குள்ள பால் சட்டிய

போல் பொங்குறேனே

ஹே பொட்ட புள்ள தொட்டதுமே

கொட்டம் அடங்கிருச்சே

ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு

துள்ளி குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா

என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால்

அழகு ரோஜா

பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்

அதை ஒத்தது தான் பெண்ணவளின்

புதிய நேசம்

பொத்தி வெச்ச அந்த புள்ள குண்டு மல்லி

நெஞ்சுக்குள்ள வேற சொல்லு

இல்ல நானும் சொல்ல

ஹே பொட்ட புள்ள தொட்டதுமே

கொட்டம் அடங்கிருச்சே

ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு

துள்ளி குதிச்சிருச்சே

சொற்களிலே வித்த கரம் கண்ணதாசன்

அவள் தொட்டதினால் ஆகிவிட்டேன்

வண்ண தாசன்

முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு

அது உள்ளத்திலே செய்திடுதே

கொடுங்கோல் ஆச்சி

இப்படி நான் இன்னும் சொல்ல

சிந்தனையும் ஓட வில்லை

யாவும் அந்த புள்ள செஞ்ச லீல.

ஹேய் பொட்ட புள்ள தொட்டதுமே

கொட்டம் அடங்கிருச்சே

ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு

துள்ளி குதிச்சிருச்சே