menu-iconlogo
logo

Moradaa Un Thaali

logo
Testi
மொரடா உன் தாலி

அடையாளம் ஆச்சு நெஞ்சுல

அணில் கட்டும் வீடும்

மதிப்பாக தோணும் கண்ணுல

அரிதாரம் பூசி

பகட்டாக வாழ தோணல

ஒரு வாயி சோரும்

பசியாத்தும் நம்ம அன்புள

நெனச்சது நடந்திட பிடிச்சது கெடச்சிடுமே

உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிஷமும் உலகத்த பிடிச்சிடுமே

மணக்குற சிரிப்புல மல்லிகப்பூ தோத்துடுமே

நீ போட்டுக்கிட்டா plastic′u வலையலும் platinum ஆகிடுமே

மொரடா உன் தாலி

அடையாளம் ஆச்சு நெஞ்சுல

அணில் கட்டும் வீடும்

மதிப்பாக தோணும் கண்ணுல

கல்யாணம் ஆகும் முன்னே காட்டாரா பாஞ்சேனே

உன்னாலே அருவி ஆனேன்

முந்தான கூண்டுக்குள்ள பூட்டேதும் போடாம

அடப்பட்டு போனேன்

உன் கைய புடிச்சுதான் என் தாய மறந்தேனே

உன் கண்ண பாத்துதான் குலசாமி அறிஞ்சேனே

உன்னோட குட்டிக் குட்டி சந்தோஷம் போதும்

பண்டிக இல்லானாலும் சும்மாவே கொண்டாட தோணும்

நெனச்சது நடந்திட பிடிச்சது கெடச்சிடுமே

உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிஷமும் உலகத்த பிடிச்சிடுமே

மணக்குற சிரிப்புல மல்லிகப்பூ தோத்துடுமே

நீ போட்டுக்கிட்டா plastic'u வலையலும் platinum ஆகிடுமே

கண்ணாடி உண்ம பேசும் நான் முன்ன அழகில்ல

நீ பாத்த அழகி ஆனேன்

நெஞ்சுக்குள் ஊதுபத்தி வாசத்தப் போல வந்து

உயிராகி போன

உன்னோட மூக்குத்தி என்னோட வின்மீனு

கண்ணீரும் உப்பில்ல உன்னால சேந்தேனு

உன்னோட திறுஷ்த்தி போக்க கற்பூரம் ஆவேன்

என் கண்ண கட்டிக்கிட்டு உன்னோட கண்ணால பார்ப்பேன்

நெனச்சது நடந்திட பிடிச்சது கெடச்சிடுமே

உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிஷமும் உலகத்த பிடிச்சிடுமே

ஒரு லட்சம் பறவைங்க மனசுல பறந்திடுமே

நம் வீட்டுக்குள்ள கடவுளின் படங்களும் கண்கள தொறந்திடுமே

அழகி என் தாலி

அடையாளம் ஆச்சு நெஞ்சுல

அணில் கட்டும் வீடும்

மதிப்பாக தோணும் கண்ணுல

Moradaa Un Thaali di Shankar Mahadevan/Vandana Srinivasan - Testi e Cover